Sunday, April 7, 2019

ஆகச் சிறந்த ஆளுமைகள் மூவர்


இலக்கிய கூட்டம் ஒன்றிற்க்கு குஞ்சிதபாதமோ, கட்டியங்காரனோ பங்கேற்காவிட்டால் அந்த கூட்டம் இலக்கிய கூட்டமாகவே கருதமுடியாது. அதுவும் கல்லூரிகளில் நடக்கும் கருத்தரங்குகள் என்றால் மூவர் நிச்சயமாக இருக்க வேண்டும்.  பொதுவாக இம்மூவரில் குஞ்சிதபாதாம் மாத்திரம் விதிவிலக்கு.  நண்பர் எப்போதும் கட்டுரை வாசிப்பவராகதான் இருப்பார்.  கட்டியங்காரன் எப்போதும் புனைவெழுத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.  ஆய்வுக்கட்டுரைகள் அவருக்கு விளக்கெண்ணை குடிப்பது போன்றது.  குஞ்சிதபாதத்திற்கு புனைவெழுத்தின் மீது  அலாதி விருப்பம் கொண்டவர் என்றாலும் எழுதுவது என்று வரும்பொது ஆய்வெழுத்துதான் அவருக்கு உகந்தது. இருவரும் இரு துருவங்கள்.
முன்றாமவர் ஒருவர் சென்னையில் உள்ள மிக முக்கியமானஆளுமை. கவலைக்குறிய விசயம் என்னவெனில் இந்த மாபெரும் ஆளுமையை மாணவர்கள் கேலிக்குரிய கொமாலியாக பார்த்து பழகிவிட்டனர் என்பதுதான் . கட்டியங்காரனோ,  குஞ்சிதபாதமோவெனில் இருவராக இணை பிரியாமல் கூட்டங்களுக்கு சேர்ந்தே செல்வார்கள். ஆனால் முன்றாமவர் எப்போதும் தனித்து ருப்பவர். யாருடனும் ஒட்டமாட்டார். என்னுடைய பார்வையில் சென்னையில் உள்ள மாபெரும் கல்வியாளர்களைக் காட்டிலும்,  அறிவு ஜீவிகளைக் காட்டிலும் இந்த முன்றாமவர் என் பார்வையில் ஆகச் சிறந்த ஆளுமையாக கருதுகிறேன்.
இதுகூட என்னில் ஏற்பட்ட திடீர் மாற்றம். சென்னையில் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் பங்கு கொள்வதற்க்கு முன் அந்த நபரைப் பற்றின என் அபிப்பிராயாம் மற்றவர்களைப் போன்றுதான் இருந்தது. அந்த கருத்தரங்குக்குப் பின் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
            உங்களுக்கு பூபாலனைப் பற்றி தெரியாதா? என்ன மாணவர் நீங்கள்! பூபாலனைத் தெரியாது என்கிறீர்களே.  பூபாலனை தெரியாவிட்டால் நீங்கள் கருத்தரங்குகளுக்கு எங்கேயும் சென்றதில்லை என்றுதான் அர்த்தம்.  குறைந்தது பத்து கூட்டங்களுக்கு சென்றிருந்தால் கூட அவர் இன்னார் என்பதை கண்டுபிடித்திருபீர்கள்.  சோசியல்சையன்ஸ் சார்ந்த எந்த கருத்தரங்கமாக இருந்தாலும் அவர் அங்கே இருப்பார். அடையாரில் உள்ள எம் டி எஸ்ஆக இருக்கட்டும்,  மேர்க்கே உள்ள சென்னை பல்கலைக்கழகமாக இருக்கட்டும்,  கிழக்கே உள்ள கிருத்துவக் கல்லூரியாக இருக்கட்டும் கருத்தரங்கு என்றால் தவறாமல் அவர் அங்கே இருப்பார்.
இதில் என்ன சிறப்பு என நீங்கள் கேட்கலாம்.  நம்முடைய தலைமுறை வழிதவறிய தலைமுறை.  இதில் ஆய்வு மனதைக் கொண்ட ஒரே  ஜீவன் பூபாலன் என்றே சொல்வேன். ஏன் என நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது. நாம் ஆய்வு என்ற வழித்தடத்தை விட்டு விலகி ஆய்வு பணியிலேயே உழல் வாதிகளாகிவிட்டோம்.
ஆய்வு என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் பிதற்றலாம் என்ற நிலையை எட்டிய நிலையில் என் பார்வைக்கு தெரிகிற சீரியசான ஆய்வாளர் பூபாலன்.
கருத்தரங்கில் சொல்லிக்கொள்ளும்படியான கட்டுரைகள் இல்லை என்றாலும் விஷமமான கட்டுரை ஒன்று வாசிக்கப்பட்டது.  கட்டுரை புராணங்களின் தாக்கம் எவ்வாறு சங்கப்பாடல்களிலும், திருக்குறளிலும், காப்பியங்களிலும் இருக்கிறது என்பதைப் பற்றினது.
இதையே பத்து வருடங்களுக்கு முன் சென்னை கிருத்துவக் கல்லூரியில் தமிழ் துறையில் இது போன்ற கட்டுரை வாசிக்கப்பட்டிருக்குமாயின் அந்த நொடியிலேயே வாசிப்பு நிறுத்தப்பட்டிருக்கும். இப்பொது நம் ஆய்வாளர்கள் ஊழல் ஆய்வாளர்களாக மாறிவிட்டோம்.  போலிக்கும், உண்மைக்கும், வஞ்சகத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகிவிட்டோம்.  ஏதிர்த்து சண்டையிடவும் தைரியம் இல்லை, பகுத்துணறும் ஆற்றலும் இல்லை. கட்டுரை அருமை என்று அமர்வின் ஒருங்கிணைப்பாளர் அதைத் தொடர்ந்து பத்து நிமிடம் பேசுகிறார்.
கடைசியாக ஒருவர் கேள்வி எழுப்பினார். பூபாலன் தான் அவார். அடுக்கடுக்காக கேள்விக்கணைகள் பாய்ந்தன. முதல்கேள்வி: புராணம் செவ்வியல் என்று வரும்போது முதலில் அவைகளின் கால வரையறையை நிர்ணயம் செய்யவேண்டும். அது முடியாத காரியம். இரண்டாவது: பாதிப்பு பற்றி பேசும் போது செவ்வியல் மற்றும் புராண வகைமைகளின் வரம்பு எல்லையைப் பற்றின தெளிவு வேண்டும்.  மூன்றாவது: புராணம் மதம் சார்ந்தது. செவ்வியல் முழுக்க முழுக்க செக்கியூளர் தன்மை வாய்ந்தது.
இத்தனை விதிமுறைகளுக்கும் மீறி பொத்தாம் பொதுவாக இதன் தாக்கம் அதில் உள்ளது என்றும்,  அதன் தாக்கம் இதில் உள்ளது என்றும் சொல்வது எப்படி என்று பூபாலன் கேள்வி கேட்டார். கேள்வியை யாரும் பொருட்படுத்தவில்லை. ஏன் குஞ்சிதபாதத்திற்கே அவ்வளவு பெரியதாக படவில்லை போலும்.
இதே நான் கேள்வி கேட்டிருந்தால் அது ஆத்திரத்தின் வெளிப்பாடாக இருந்திருக்கும். பூபாலன் கேட்டது போன்று அறிவு பூர்வமாக இருந்திருக்காது. இது போன்ற கேள்விகள் 90களின் கேள்விகள். அதன் முடிவாக எங்கேயோ எப்போதோ 2000ங்களில் ஒலித்துக் கொண்டிருந்தன. 2010களுக்கு பிறகு சத்தம் ஓய்ந்து போய்விட்டது. நம் மண்டையும் இருளடைந்து போய்விட்டது.
இந்ததலைமுறைக்கு ஒன்று கோபப்பட்ட தெரியும் அல்லது மங்குனிகளாக இருக்கத் தெரியும்.  அறிவுப்பூர்வமாக பேசவும் தெரியாது யோசிக்கவும் தெரியாது. பூபாலன் சென்ற தலைமுறையின் கடைசி சரடு.  நாம் ஒருவர் கூட அவரை ஒரு பொருட்டாக எண்ணியது இல்லை.  அன்றைய மாணவர்கள் ஒருவருக்கு கூட அவரின் அருமை தெரிந்திருக்காது. நம் கணக்குபடி பிழைக்க தெரியாத மனிதர் அவர்.  நாம் பங்கேற்கும் கருத்தரங்குகள் லாபநோக்கம் கொண்டவைகள்.  நாலு விசயம் தெரிந்து கொள்ள நாம் கருத்தரங்குகளுக்கு செல்வதில்லை. நம்முடைய C V யின் நீளத்தை அதிகமாக்க நமக்கு அவைகள் உதவும். கருத்தரங்கு செல்வதன் நோக்கம் அறிவை மேம்படுத்த என்பதை நாம் உளப்பூர்வமாக நம்புவதில்லை.
இதில் பூபாலன் கருத்தரங்குகளின் சான்றிதழ்களை வைத்துகொண்டு என்ன செய்ய போகிறார்?  நிச்சயமாக அவைகள் அவருடைய CVக்காக அல்ல என்பது நமக்கே நன்றாக தெரியும். அவரை பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு ஏளன சிரிப்பு. சரி அப்படி மிகவும் சீரியசாக கருத்தரங்குகள் நடத்தியவர்கள் பங்கு கொண்டவர்கள் என்னத்தை பெரியதாக வாழ்கிறார்கள்.
கல்விப்புலங்களில் மலினமான ஊழல்வாதிகளாகத்தான் மாறினோம். நம் அடையாளம் இல்லாமல் ஆக்கப்படுகின்றதே என்ற பிரங்ஞை கூட இல்லை நமக்கு. சராசரி பேர்வழி என ஒருவரை  இனம் காண  மீடியாக்கார் என்ற வார்த்தையையே பழிசொல்லாக கருதப்பட்டது. இன்றைய சூழலில் அதுவே மிகவும் நாகரீகமான நிலைமை. மலினமான ஊழல் பேர்வழிகள் என்று சொன்னால் கூட நமக்கு இனி உரைக்கப் பொவதில்லை.
ஏது எப்படியோ பூபாலனை என்னுடைய ஆதர்ச நாயகர்களான கட்டியங்காரனோடும் குஞ்சிதபாதத்தோடும் ஒன்றாக வைத்து ஆகச் சிறந்த ஆளுமைகள் மூவர் என்று பட்டாபிஷேகம் செய்கிறேன்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...