Tuesday, April 16, 2019

காலத்தின் பரிசு


தென்ஆப்பிரிக்காவில் தனக்கு கிடைத்த பெறும் வெற்றி நிச்சயம் தாய்நாட்டுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுதந்திர தேசம் பற்றின கனவுகளை சுயராஜ்ஜியம் என்ற தலைப்பில் எழுத்துக்களாக காகிதங்களில் கனவென சுமந்து கொண்டு துறைமுகத்தில் நுழைகிறது அந்த கப்பல்.  வரலாறு கண்ட மாமனிதர்கள் உருவங்கள் சித்திரமாக தீட்டபடாமல் இருந்திருக்குமானால் அவர்கள் உயரம் நம் கற்பனைக்கு அடங்காமல் இருந்திருக்கும்.  நெப்போலியன் ஆறடி நெட்டையானவராக நமக்கு தெரிந்திருப்பார்நம் பார்வைக்கு குள்ளமானாவர்கள் அவலட்சணாமானவர்கள்நாட்டை ஆள்பவனின் உயரம் அக்குடிகளின் உயரத்திற்கு சற்று உயர  இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
அந்த நெப்போலியனும் சரி இலட்சியகனவுகளை சுமந்துவரும் இந்த இளைஞனும் சரி நாம் எதிர்ப்பார்க்கும் நெடிய உயரம் கொண்டவர்கள் அல்லசராசரிக்கும் சற்று குறைவான உயரம் கொண்டவர்கள்இது இருபதாம் நூற்றாண்டு கொடுத்த காலத்தின் பரிசு. ஒரே வித்தியாசம் ஆனால் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.  ஒருவர் வாள் கொண்டு யுத்தம் செய்தவர்.  மற்றொருவர்அதாவது நம்முடைய இளைஞன்,  துன்புறுத்தாமை என்னும் ஆயுதம் கொண்டு அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கபோகிறவர்.  இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நெப்போலியனுக்கும் இந்த இளைஞனுக்கும் சம்பந்தம் எதுவும் கிடையாது.
அவர்கள் உயரம் வேண்டுமானால் ஒப்புமைக்கான சந்திப்பு புள்ளியாக கருதலாம். ஒப்புமை மற்றொண்டும் உள்ளதுமுழு உலகத்துக்கும் நவீன காலம் என்னும் புதிய யுகத்திற்கான கதவு நெப்போலியன் என்று பிரெஞ்சு நாவலாசிரியர் விக்ட்டர் யூகோ கூறுவார்அதே கூற்றை நம் இளைஞனுக்கும் பொறுத்திப் பார்க்கலாம்இருபதாம் நூற்றாண்டு இந்த இளைஞனை தன் கதவாகக் கொண்டு திறக்கப்போகிறதுஇதனுள் கீழைநாடுகள் மாத்திரம் அல்ல மேற்கும் (ஆளவும் ள்வதற்கென்றும் பிறந்த இனத்தை ஆண்டைகள் என்ற ஆதிக்க எண்ணத்தில் இருந்துவிடுவிக்கப்பட போகிறதுவிடுதலை என்னவோ இருவருக்கும்தான்.
வரலாறு தன் விடுதலைக்கான கருவியாக தன்னை பயன்படுத்த போகிறது என்பதை துறைமுகத்தில் வந்திறங்கிய இளைஞனுக்கு அப்போது தெரியாது.  வரலாறு சில நேரங்களில் சக்திவாய்ந்த மனிதர்களை நிராகரிக்கிறது.  மிகவும் பலகீனமானவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.  அடர்ந்த காடு சிங்கங்களையோ புலிகளையோ பலுகிப்பெருக அனுமதிப்பதில்லைஅச்சதில் வாழ்கிற உயிரினம் வாழ்வதற்க்கு காடு தன் கரங்களை விரித்து அணைத்துக் கொள்கிறதுஇது உலகத்தின் எந்த காட்டுக்கும் பொருந்தும்இத்தேசம் இதில் விதிவிலக்குஇந்த தேசத்தின் காடு கொல்லப்படும் மான்களின் கூட்டத்திற்கு உரியது அல்ல. இது Rudyard Kipling சித்தரிக்கும்தேசம்விலங்குகள் நிறைந்த கூட்டத்தில் ஒரே ஒரு மனித இனத்தை சார்ந்த சிறுவன் நுழைகிறான்.  முழு கதையும் வினோதமாக மாறுவது அச்சிறுவனது நுழைவினால்சிறுவனை கதையில் இருந்து நீக்கினால் கதை இல்லைகதை ஓட்டம் இல்லை புனைவும் இல்லைவிலங்குகளின் கூட்டமான காடு ஒரு இயல்பு நிலைஅதுவே சிறுவன் ஒருவன் மிருகங்கள் மத்தியில் அவைகளைப் போன்று தானும் ஒன்றாக மாறும் போது புனைவு பிறக்கிறது.
மேற்கத்தியர்களுக்கு பன்னையில் விலங்குகள் மனிதனாக மாற முயற்சிப்பது புனைவின் அதிசயம்நமக்கோ மிருகங்ளின் மத்தியில் மனிதன் மிறுகத்தோடு அல்லது மிருகங்களின் இயல்புக்கு தன்னை தகவமைத்துக்கொள்வது வெறும் புனைவு மாத்திரம் அல்ல அதற்கும் மீறி கதை ஜாலக் கதையாக மாறுகிறது.
துறைமுகத்தில் இருந்து அகண்ட தேசத்திற்குள் நுழையும் இளைஞன் இருபதாம் நூற்றாண்டின் அற்புதக் கதைக்கு காரணமாகப் போகிறான்இந்த நூற்றாண்டு விடுதலைக்கான நூற்றாண்டு.  வரலாறு தனக்காக பயன்படுத்திக் கொள்ளபோகிற கருவிமிக நீண்ட பாரம்பரியத்தில் வந்த சக்தி வாய்ந்த மன்னர்களை அல்ல.  மிகவும் பலவீனமான குள்ளாமான சீட்டுக்குருவி என ஆங்கிலேயர்களால் கேளியாக அழைக்கப்பட்ட இந்த இளைஞன்.  
தென் ஆப்பிரிக்காவில் தனக்கு கிடைத்த சாதனை இங்கேயும் கிடைக்கும் என்கிற பெறும் நம்பிக்கை அவன் முகத்தில் தெரிகிறதுஇது தான் பிறந்த சொந்த தேசமே என்றாலும் இன் நாட்டிற்கு அவன் ஒரு அன்னியன்.  Mowgli போன்று தன்னை வேறொரு வாழ்க்கை முறைக்கு தகவமைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறதுஆதற்கே காலம் போதாதுகாரணம் இருபதாம் நூற்றாண்டு மிகவும் துரிதமானதுக்கான தேவையை மிகவும் பலவீனமானவர்களை வைத்து பூர்த்தி செய்துகொள்ளப்போகிறதுஇளைஞன் ஆயிறமாண்டு பௌத்த ஞானத்தையோ பின்பு கூடுதலான ஆயிரம் ஆண்டு சனாதனத்தின் தரிசனத்தையோ கண்டடைய யூகங்களுக்கான தவத்தை மேற்கொள்ளபோவதில்லை. (இப்படியும் சொல்லலாம் ஆயிரம் ஆண்டு சனாதனத்தின் ஞானத்தையோ, ஆயிரம் ஆண்டு பௌத்தத்தின் தரிசனத்தையோ என) நவீனத்தில் அப்பேர்ப்பட்ட பூதாகரமான காலத்திற்கு இடம் இல்லை.  எதற்காக முழு உலகமும் மனித நாகரீகம் தோன்றிய நாள் முதல் உழைத்து கொண்டு அடைய முடியாமல் போனதோ அவற்றை கால் நூற்றண்டுக்குள் இவ்விளைஞனைக் கொண்டு அடையப்போகிறது இன்நூற்றாண்டு.  விடுதலை.
வரலாற்றின் கரத்தில் மனிதன் வெறும் கருவி மாத்திரமேசக்தி வாய்ந்தவர்கள் அனைத்தும் தங்களாலேயே நடக்கின்றன என்று யோசிக்க முற்படுகிறார்கள்பலவீனமானவர்கள் காலத்தின் கோரமுகத்தைக் கண்டு அஞ்சி விலகி ஓட முற்படுகிறார்கள். எனினும் வம்படியாக கக்தியற்றவர்கள் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர்கள் ஆகிறார்கள்.
கிப்ளிங்கின் கதையில் கொடூரமான Shere Khan,  அதிவேகம் கொண்ட Bagheera,  பெருந்தீனி Baloo,  வெறிப்பசிகொண்ட ஓனாய்கள் என பலர் காட்டை ஆள இருந்தனர்இருக்கின்றனர்தேசத்தின் மாய புனைவுக்கு அவைகளின் மத்தியில் சிறுவன் ஒருவன் அவசியம். இளைஞன் தேசத்திற்குள் நுழையும் தருணம் தேசத்தின் அதிபுனைவின் ஆரம்பம்.
இந்த புனைவின் மாயைக்கு ஆட்படாமல் தென் பகுதி மாத்திரம் தன் தொல் குடியின் நீண்ட தொடர்ச்சியில் தனித்து இயங்கிக்கொண்டிருக்கிறது.  கிப்ளிங்கின் ஜாலக்க்கதை இவர்களுக்கு வெறும் சிறுவர் இலக்கியம்.  இளைஞனே மகாத்மாவாக வேண்டுமானாலும் இந்த தொல்குடியால்தான் முடியும். பட்டத்தை வேண்டுமானால் தேசிய கவி சூடட்டும். எனினும் தேசம் பற்றின நவீன வரலாற்றில் தென் பகுதி மறந்து போனகதை.  அகண்ட தேசத்தின் இரு காவியங்கள் கூட இதைப் பற்றி பேச போதாது.  ன்று இந்த நிலப் பகுதியை விட்டு விட்டு தன் கதையை சொல்லும்மற்றொண்டு இப்படி ஒரு நிலம் இருப்பதையே கணக்கில் கொள்ளாமல் தெற்கே உள்ள தீவுக்கும் தேசத்தின்வடக்குக்கும் கதை ஓட்டம் தாவிச் செல்லும்.


No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...