Monday, August 10, 2020

ஆசை முகம் மறந்து போச்சே, நினைவு மறக்க லாமோ

                                                                                                                                                                                                                         Tamil Nadu Professor, Theatre Director Pitambarlal Rajani Dies Of ...        

    முதல் சந்திப்பில் பார்த்த ஒருவருடைய முகத்தை வாழ்நாளில்  ஒருபோதும் மறக்கவே முடியாது.  அது நெஞ்சில் வரையப்பட்ட அழியாத கோலம். நீடித்து காலத்திற்கும் நிலைநிற்கும் முகம் அது. பின்பு எத்தனை வருடங்கள் அந்த முகத்தோடு வாழ்ந்து பழகினாலும் அந்த முதல் சந்திப்பில்  பெற்றுக் கொண்ட சித்திரத்துக்கு அது ஈடாகாது. முதல் சந்திப்பின் முகம் தனித்து நிற்கும் முகம்.  நம் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் முதல் சந்திப்பின் முகத்தை நம் மனத்திற்குள் வரைந்து வைத்திருப்போம்.  விதிவிலக்காக அம்மாவின் முகத்தை வேண்டுமானால் சொல்லலாம். அது பழகிப் போன முகம். அது வியப்பையோ, அச்சத்தையோ திடீர் என்று ஏற்படுத்துவதில்லை. கருனையின் முகம் அது. மற்றபடி அப்பா முதல் நண்பர்கள் வரை எல்லாருடைய முகங்களும் ஏதோ ஒரு தாக்கத்தை நமக்குள் செலுத்தி அம் முகத்தை மனதிற்குள் பதியவைக்கின்றன. புகைப்பட ருவி போன்று. ரு கிளிக் செய்தவுடன் பட்டென்று வெளிச்சம் பாய்ந்து காட்சி கருவிக்குள் பதிய வைக்கப்படுகிறது.

முதல் சந்திப்பில் அறிமுகமாகும் முகம் க்க முடியாமல் போவதற்குக் காம் முதலில் அம் முகம் ஏற்படுத்தும் பாதிப்பு பின்பு அதன் விளைவாக நமக்குள் ஏற்படும் ஒரு விதமான மின்னல் தாக்கம். முன் சொன்னது போன்று அது  புகைப்படக் கருவியில் வெளிவரும் வெளிச்சத்தைப் போன்றது.  சிலருடைய முகம் கனிவுடன் தில் பதிய வைக்கப்படுகிறது.  சிலருடைய முகம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிட்டு பதிவாகிறது. சிலருடைய முகம் ஒருவித வியப்பை ஏற்படுத்தி விட்டு பதிவாகிறது.  பின்பு அந்த தாக்கம் மறைந்து அந்த முகத்திற்கு உரிய நபரின் ளுமைக்கு கொஞ்சம் அருகில் சென்று நெருங்கிப் பழக ஆரம்பித்து விடுகிறோம். முகம் பழகிவிடுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலவியல் முதுகலை பயில விண்ணப்பித்து இருந்தேன்.  நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வின் பாதி மதிப்பெண் எழுத்து தேர்வு மூலமாகவும் பாதி நேர் முகத்தேர்வு மூலமாகவும் வழங்கப்படும். மிகவும் பதட்டத்துடன் நேர் முகத் தேர்வுக்கு தயாராக ஆங்கிலத்துரைக்கு வெளியே நடைக் கூடத்தில் காத்திருந்தேன். நடைக் கூடத்தில் உயரமான உருவத்துடன்,  வெண் தாடி காற்றில் பறக்க, தோள் பையை வயிற்றுக்கு முன் புறம் வைத்தவாறு மாணவர்களுடன் ஒரு நெடிய உருவம்  பேசிக் கொண்டிருந்தது. மேலிருந்து வெண் தாடி முதல் பேரகன் செருப்பு அணிந் கால் வரையிலான அந்த உருவம் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து கவனிக்க செய்யும்படியான உருவம்.

பார்த்த மாத்திரத்தில் அதீத பாதிப்பையும் ஈர்ப்பையும் ஏற்பட்டுத்தும் உருவத் தோற்றம். அது பேராசிரியருக்கேயான உருவம். அந்த உடல் தோற்றம் வேறு எந்த தொழிற் புலத்திற்கும்உரியது அல்ல.  பேராசிரியருக்கு மட்டுமேயான உருவம். ஒருவர் பார்த்த மாத்திரத்தில்  கண்டிப்பாக இவர் இங்கு பணி புரியும் பேராசிரியராகத்தான்  இருக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்.

நேர்முகத் தேர்வின் என்னுடைய முறை வந்தது.  பதட்டம் ஒருவித படபடப்பாக மாறியது. முதுகலை படிப்பை விட்டால் வாழ்க்கையில் வேறு வழியே இல்லை என்ற நிர்பந்தத்தில் இருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் வெண் தாடி பேராசிரியர் மற்ற பேராசிரியர்களோடு தேர்வுக்கான கேள்விகளைக் கேட்க அமர்ந்திருந்தார். தோள்பையை கழற்றாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.  மற்றுமொரு தாடி வைத்த நவீனத்தின் அறிவு முதிச்சியை வெளிக் காட்டும் படியா கருப்புத் தாடி பேராசிரியர் இன்னொருவரும் உடன் இருந்தார். அந்த ரண்டு முகங்களும் தேர்வு  பற்றின படபடப்பை அமைதியடையச் செய்தன.  வெண் தாடிக்காரர் கொஞ்சம் மிரட்டும் தொணியுடன் முதலில் கேள்வியைக் கேட்டார். கேள்வி மிரட்டலாக இருந்தலும் பயத்தைவிட பெரும்மதிப்பு பதில்களை தடையின்றி சொல்லச் செய்தது.  சேக்‌ஷ்பியரின் டிராஜிக் காமடி பற்றி விளக்கும் படிகட்டளை புறப்பட்டது. படபடவென்று வெடித்து ள்ளிவிட்டேன். இப்போதைய ன்னுடைய ஆய்வு நெறியாளர் பேராசிரியர்  ரமணன் ஐயாவும் தேர்வுக் குழுவில்  இருந்தார். சமீபத்தில் என்ன புத்தகம் படித்தாய் என்று அவர் தரப்புக்கு ஒரு கேள்வியைக்  கேட்டார். பதில் தயாராக இருந்தாலும் அக் கேள்வியினால் சற்று  அச்சமடைய வேண்டியிருந்தது. அப்பொழுது டாம்ஜோன்ஸ் நாவலை படித்து முடித்திருந்தேன். டாம் ஜோன்ஸ்  என்றுபதில் அளித்தேன். அது என்ன வகையான நாவல் என்று அடுத்து அச்சமூட்டும் கேள்வியை எழுப்பினார். பதிலேதெரியாத அந்த கேள்விக்கு கருப்பு தாடி பேராசிரியடிடம் பதில் இருந்தது. அவர் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. இருந்தும் மிக கவனத்தோடு பதில்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய அந்த அக்கறையான கவனிப்பில் இருந்து பதில் கிடைத்தது. தெரியாத பதிலை யோசிக்காமல் அது ரொமான்ஸ் வகையான நாவல் என்று என்னையும் அறியாமல் பத்தில் அளித்து விட்டேன். ரொமான்ஸ் என்ற வார்த்தைக்கு திரணாய் வின்படியான அர்த்தம் அப்போது எனக்கு தெரியாவிட்டாலும் பதில் ஒருவருடைய கரிசனையான கவனிப்பில் இருந்தும் மற்றொருவர் மீதான பெருமத்திப்பில் இருந்தும் வெளிவந்தது. வெண் தாடியின் முகமும், முதல் ந்திப்பில்பெரும்மரியாதைக்குரிய முகமாக அப்போது தில் ஆழ பதிந்து போய் விட்டது. பல்கலையில்இடம்  கிடைத்தால் இந்த மாபெரும் ஆளுமையிடம் ஆங்கிலம்  பயிலப் போகிறோம் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது.

அந்த முதல் சந்திப்பின் முகத்தை இப்பபோது பழகிப்போன அந்த பேராசிரியடம் தேடிப்பார்க்கிறேன் கிடைக்கவே ல்லை. அந்த முதல் சந்திப்பின் முகத்தை இப்பொது இருக்கும் பழகிய முகத்தில் இருந்து பிரதி எடுக்க முயற்சி செய்கிறேன் முடியவில்லை.

இத்தனை ண்டுகள் பழகிப்போன மற்றொரு முகமும் கூட இனி இல்லை. பழகின அந்த முகமும் மறைந்து விட்டது. மறைவு கொடுக்கும் பாதிப்பு வேதனைஎன்று வார்த்தையில் எழுதிவைத்தால் வேதனையின் தாக்கத்தை  உணர முடியாது. அது சொல் விளக்கா துயரம். பழகின முகம் பிரிவின் முகமாக கண்ணீரை வரவைக்கிறது. சென்று வாருங்கள் ரெஜானி. பெரும்மதிப்பை அளித்த அந்த முதல் சந்திப்பின் முகத்தையும்,  முதுகலை நாட்கள் முதல் இன்றுவரை பழகின முகத்தையும், புகைப்படங்களில் இப்போது பிரிவு சொல்லும் முகமாக கண்டு கொஞ்சம் பிரிவின் கண்ணீரை அஞ்சலியாக செலுத்துகிறோம்.சென்று வாருங்கள்.

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...