Wednesday, June 13, 2018

To Be or Not To Be



To Be or Not To Be
எழுத்தாளர் கட்டியங்காரன் தற்போதைய நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஆளுமை என உருவாகிவருகிறார். எங்கள் men Friday வாசிப்பு குழுமம் இவரை ஒரு மாபெரும் படைப்பாளியாக உருவாக்கும் பொருட்டு இலக்கிய தீனி போட்டு வளர்த்து வருகிறது. இவர் கதை எழுதுவதைப் பார்த்தால் பித்தனுக்கும், சு ரா வுக்கும் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது தெரிகிறது. கூட்டங்கள் என வெளியில் உலாவக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிறுக்கிறோம். எந்த இலக்கிய நிகழ்ச்சிக்கும் அவர் போக(வே)க் கூடாது என்பது குழுமத்தின் கட்டுப்பாடு. காலம் கெட்ட கெடப்பில் அரசியல் சார்பு மூளையில் ஒட்டிக்கொள்ளும். அதுவும் கோட்பாடற்ற அரசியல். மானுடதைப் பற்றி 'எழுதுய்யா' என்றால் தத்துவம், கருத்தியல், கோட்பாடு என எதையாவது உளறிக் கொண்டிருப்பார். 
கட்டுப்பாட்டில் ஒரே ஒரு relaxation - எவ்வளவுக்கு வேண்டுமானாலும் வெளிநாடுகளுக்கு சுற்றுளா பயணம் என சுற்றித் திரியலாம். பயணத்திற்கு தம் சொந்த பணத்தில் இருந்துதான் செலவழிக்க வேண்டும். இல்லையென்றாள் நம் நண்பரும் Loyola கல்லூரியின் பேராசிரியருமான ஜெய் தினேஷ் போன்று வட்டிக்கு கடன் வாங்கியாவது அவரை போல ஐரோப்பா, இலங்கை என ஊர் சுற்றளாம். உள்ளூரில் மாத்திரம் எங்கேயும் எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.
கட்டியங்காரன் மலேசியா சிங்கப்பூர் என ஊர் சுற்றி விட்டு கடந்த மே இறுதியில் ஊர் திரும்பியிருக்கிறார். பயணப் படியை பன்னிரண்டு மாதத் தவணையில் செலுத்திக்கொள்ளலாமாம்.
ஊர் திரும்பியதும் பயண அனுபவத்தை நண்பர்களிடம் ஓயாமல் ஒரு வாரத்திற்கு கதைகட்டியிருக்கிறார். அவர் வாயை அடைக்க நாடகக்காரர் டேவிட் வெஸ்லி விருந்திற்கு அவரை அழைத்திருக்கிறார். நண்பர் டேவிட் வெஸ்லியின் அம்மா செய்யும் பிரியாணி எங்கள் அனைவருக்கும் அத்தனை பிரியம். அதற்கு கடோர்கஜன்களாகிய நானும் சேது டார்வினும்தான் சரியான ஆட்கள். பாவம் கட்டியங்காரன் பித்தனைப் போலவே அவருக்கும் வயிற்று உபாதை. அளவோடுதான் சாப்பிடுவார். சென்றவாரம் பிரியாணி சாப்பிட டேவிட் வீட்டிற்கு சென்றிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மென் பிரைடே குழுமம் மீண்டும் சந்திக்கிறது. வழக்கம்போல் பிரியாணி பின்பு நல்ல கதை, விவாதம் கடைசியில் தேனீர் கடையில் டீ. இதுவே திருவல்லிக்கேணியாக இருந்தால் முதலில் கதை பின்பு மற்ற அனைத்தும் என தலைகீழாக இருக்கும். எப்படியிருந்தாலும் பிரியாணி, கதை, விவாதம் கடைசியில் டீ/ஜூஸ் இல்லாமல் மென் பிரைடே கூட்டம் இருந்ததில்லை. கூட்டத்திற்கு இவைகள் அனைத்தும் அத்தியாவசியமானவைகள். இந்தமுறை குழுமம் உருப்படியாக  எதையாவது செய்ய வேண்டும் என உத்தேசித்துள்ளது. இனி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு ஆங்கில பத்திரிக்கை ஒன்றை கொண்டு வரவேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கட்டியங்காரன் அகடவிகடம் பத்திரிக்கையை நடத்திவருகிறார். தமிழில் இப்போதைக்கு அதுதான் தரமான இலக்கிய பத்திரிக்கை. இப்போதெல்லாம் ஒரு கட்டுரையை பத்திரிக்கைக்கு அனுப்பினால் மூன்று வருடங்கள் கழித்துத்தான் வெளிவருகிறது. கதைகளை அனுப்பினால் சொல்லவே வேண்டாம். அதனால்தான் கட்டியங்காரன் சொந்த பத்திரிக்கையை ஆரம்பித்துவிட்டார் போலும். இந்த பெயரையே ஆங்கில பத்திரிக்கைக்கும் வைத்துவிடலாம் என என் காதில் சிசுகிசுத்தார். ஆங்கில பத்திரிக்கைக்கு இந்த பெயர் சூட் ஆதாது என விசயத்தை அப்படியே அமுக்கிவிட்டேன். கோபத்தில் போய்வருகிறேன் என்று ஒருவார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் டீக்கடையில் இருந்து நேராக அம்பத்தூர் பஸ்டாண்டுக்கு சென்று திருவல்லிக்கேணிக்கு போக பஸ் பிடித்து கிளம்பிவிட்டார். இவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு நான் படும் பாடு எனக்குத்தான் தெரியும். அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு தன் பத்திரிக்கையின் பேரை சிபாரிசு செய்ததும் அதனை நான் தட்டிக்கழிக்க அவர் கோபப்பட்டதும் நல்லவேளை எனக்கு மட்டும்தான் தெரியும். இது எதுவுமே தெரியாமல் நாடக்காரர் டேவிட் வெஸ்லி பெரும் மகிழ்ச்சியில் இந்த சந்திப்பின் அனுபவத்தை வைத்து ஒரு கதை வேறு எழுதிவிட்டார். அதுவும் தமிழில்.  அவருக்கு கட்டியங்காரன் என்றால் தனிப்பிரியம். கட்டியங்காரன் Hamlet பாத்திரத்தை அவர் நாடகத்தில் சும்மா மிடுக்காக To be or not to beயை  ராஜபாட் ரங்கதுரை போன்று  நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. கதைக்காரருக்கு ஏன் நாடகம் நடிப்பு இதுவெல்லாம். சேது டார்வினுக்கு இது தெரிந்தால் இடம் அதிரும்படி சிரித்து வைத்துவிடுவார். அதற்கு வேறு தனி பஞ்சாயத்து வைக்க வேண்டிவரும். இனி குழுமத்தில் இருந்து நாடகங்களில் கலந்து கொள்ளக் கூடாது என மற்றுமொரு கட்டுப்பாட்டை கட்டியங்காரனுக்கு விதிக்க வேண்டும். நாடக்காரரின் கதை மிக அருமை.
   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...