Sunday, August 14, 2016

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது?

தமிழ்த்துரை மாணவர்கள் எப்போதும் எளிமையாக காட்சியளிப்பவர்கள். அட, இவர்களிடம் என்ன இருக்க போகிறது என்ற எண்ணம் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். சற்று அருகில் சென்று விவாதிக்கும் போதுதான் தெரியும் ஆங்கிலத்துரை மாணவர்கள் கற்க வேண்டியது அதிகம் அவர்களிடம் இருக்கிறது என்பது. ஆனால் இடைவெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளி உடையும் போது கிடைக்கும் ஆதாயம் இருசாராருக்கும் அதிகம். தமிழ்துரை மாணவர்கள் கட்டுரைகளை படிக்கும் போது அதிகம் கோட்பாடுகளை அள்ளி வீச மாட்டார்கள். தரவுகளை சேகரித்து நேர்த்தியான விதத்தில் தருவதில் கைத்தேர்ந்தவர்கள். ஆனால் ஆங்கிலத்துரை மாணவர்கள் பீட்டர் இங்லீஷ்சை வைத்துக் கொண்டு ஒரு கருத்தை மாத்திமே வைத்து கொண்டு வீடு கட்டிவிடுவார்கள். இது மொழி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். ஆனாலும் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம்.
        எங்கள் துரைக்கு தமிழ் துரையில் இருந்து Mphil மாணவர் ஒருவர் தனது உதவித் தொகை சார்ந்த ஆய்விர்க்கு ஓலைச் சுவடி பற்றிய தனது ஆய்வரிக்கை திட்டத்தை மொழி பெயர்த்து தரும்படி எங்களை அணுகினார். சற்று தயக்கத்துடன் ஆய்வரிக்கையை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். ஓலைசுவடியில் என்ன இருக்கிறது அதை ஆய்வு செய்வதற்கு, என்று தான் மொழிபெயர்ப்பை ஆரம்பித்தேன். அறிக்கையின் மொழிபெயர்ப்பில் உள்ளே செல்ல செல்ல தான் தமிழின் பிரம்மாண்டம் என்ன என்பதை உணர ஆரம்பித்தேன். வெறும் அரை மணி நேரம் தான் செலவழித்தேன். நான் செய்த மொழி பெயர்ப்புகளில் மிகக் குறைந்த நேரத்தில் முடித்த மொழி பெயர்ப்பு இது மாத்திரமே.
நம்முடைய தமிழும் அதன் இலக்கியமும் பல ஆயிரம் ஆண்டுகள் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் அவைகளை இந்த ஓலைச் சுவடிகள் இன்றைய பேப்பர் புத்தகத்தை விட அதிகம் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறது. இதைப் பற்றி அதிகம் இங்கே பேசுவது நல்லது அல்ல. காரணம் இது மற்றவருடைய ஆய்வு. எனினும் அப்போதுதான் நான் தமிழின் உண்ணத்தை உணர ஆரம்பித்தேன். மொழி பெயர்த்து அவரிடம் தந்த போது அந்த அப்பாவித்தனமான முகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவ்வளவு பெரிய தகவல்களை தந்துவிட்டு எவ்வளவு மிடுக்கு அவரிடம் இருக்க வேண்டும்.
தமிழை பற்றிய பெருமிதத்தை அந்த நண்பர் அதிகம் ஏற்படுத்திவிட்டார். ஆங்கிலத்துரையில் இருக்கிறவர்களுக்கான பொறுப்பு அதிகம் இருக்கிறது. கோட்பாடுகளையும். இசங்களையும் கற்று என்ன பயன். இப்போது நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய கோரிக்கை மொழிப்பெயர்ப்பிற்கான ஆங்கிலத்தை செழுமைப் படுத்த வேண்டும் என்பதுதான்.   

No comments:

Post a Comment

ஒழுங்கின்மையின் இயங்கு சக்தி: 𝗣𝘆𝗼𝘁𝗿 என்கிற சைக்கோபாத் (𝗧𝗵𝗲 𝗗𝗲𝘃𝗶𝗹𝘀)

               பனிக்கட்டியின்   தன்மை  ' குளிர் '  என்று   ஒரு   சொல்லை   மொழி   கண்டடையாத   வரை   பனிக்கட்டியைப்   பற்றின   அனுபவம்...